< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்றபோது பள்ளத்தில் விழுந்த பட்டதாரி வாலிபர் சாவு

தினத்தந்தி
|
16 Jun 2023 1:50 AM IST

மோட்டார் சைக்கிளில் சென்றபோது பள்ளத்தில் விழுந்த பட்டதாரி வாலிபர் உயிரிழந்தார்.

முசிறி:

பட்டதாரி வாலிபர்

முசிறியை அடுத்த வெள்ளூரை சேர்ந்த பெரியசாமியின் மகன் கிருத்திக் ரோஷன்(வயது 22). பட்டதாரியான இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் ஐவேலியில் இருந்து வெள்ளூர் வழியாக அருகில் உள்ள அய்யம்பாளையம் பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு பெட்ரோல் போடுவதற்காக சென்றார். வெள்ளூர் புங்க மரத்தடி தாண்டி பாலத்தடுப்புச்சுவர் அருகில் சென்றபோது, பள்ளத்தில் நிலைதடுமாறி விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

போலீசார் விசாரணை

இது குறித்து அவரது தாய் கண்ணகி கொடுத்த புகாரின்பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கிருத்திக் ரோஷனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்