< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
சாலையில் பழுதாகி நின்ற அரசு பஸ்
|2 Oct 2023 1:00 AM IST
கொடைக்கானலில் சாலையில் பழுதாகி நின்ற அரசு பஸ்சால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொடைக்கானல் தாலுகா வில்பட்டி கிராமத்தில் இருந்து கொடைக்கானலுக்கு அரசு பஸ் ஒன்று நேற்று பகலில் வந்து கொண்டிருந்தது. 7 ரோடு சந்திப்பு பகுதியில் பஸ் வந்தபோது திடீரென சாலையில் பழுதாகி நின்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் அங்கு வந்து பஸ்சை சாலையோரமாக நிறுத்தினர். பஸ்சில் ஏற்பட்ட பழுதை சீரமைக்க பல மணி நேரம் ஆனது. இதனால் இலகு ரக வாகனங்கள் மட்டுமே அந்த சாலையில் அனுமதிக்கப்பட்டது. கனரக வாகனங்கள் மாற்றுச்சாலையில் திருப்பி விடப்பட்டது. இதற்கிடையே வாரவிடுமுறையையொட்டி நேற்று சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் சுற்றுலா வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. இதையடுத்து கூடுதல் போலீசார் அப்பகுதிக்கு வந்து வாகனங்களை திருப்பி அனுப்பினர்.