< Back
மாநில செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் டயர் வெடித்ததால் நடுவழியில் நின்ற அரசு பஸ்; பயணிகள் அவதி
மதுரை
மாநில செய்திகள்

திருப்பரங்குன்றத்தில் டயர் வெடித்ததால் நடுவழியில் நின்ற அரசு பஸ்; பயணிகள் அவதி

தினத்தந்தி
|
30 Sept 2023 1:30 AM IST

திருப்பரங்குன்றத்தில் முன்பக்க டயர் திடீரென்று வெடித்ததால் நடுவழியில் அரசு பஸ் நின்றது. இதனால் அந்த பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அவதி அடைந்தனர்.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றத்தில் முன்பக்க டயர் திடீரென்று வெடித்ததால் நடுவழியில் அரசு பஸ் நின்றது. இதனால் அந்த பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அவதி அடைந்தனர்.

நடுவழியில் நின்ற பஸ்

மதுரை எம்.ஜி.ஆர்.பஸ் நிலையத்தில் இருந்து பெரியார் பஸ் நிலையம், பழங்காநத்தம், திருப்பரங்குன்றம் வழியாக திருநகருக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு மதுரை மாநகர தாழ்த்தள அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. திருப்பரங்குன்றம் சன்னதி பஸ் நிறுத்தம் அருகே வந்த போது பஸ்சின் முன் டயர் திடீரென்று வெடித்தது. உடனே டிைரவர் பஸ்சை நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது. பஸ் நடுவழியில் நின்றது. இதனால் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் உரிய நேரத்தில் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். அப்போது அந்த வழியாக திருமங்கலம் நோக்கி சென்ற மற்றொரு தாழ்தள பஸ்சை தடுத்து நிறுத்தி பயணிகளை கண்டக்டர் அனுப்பி வைத்தார். இது குறித்த தகவலின்படி திருப்பரங்குன்றம் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து மெக்கானிக் வந்து நடுரோட்டில் டயரை கழட்டி பஞ்சர் ஒட்டினர். அதன்பிறகு அங்கு இருந்து அந்த பஸ் புறப்பட்டு சென்றது.

புதிய டயர்களை பொருத்த கோரிக்கை

திருப்பரங்குன்றம் திருநகர், ஹார்விப்பட்டி, மற்றும் திருப்பரங்குன்றத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கு சென்று வரக்கூடிய அரசு பஸ்களின் உதிரி பாகங்கள் சேதமடைந்த நிலையிலேயே இயக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆகவே அடிக்கடி அரசு நகர பஸ்கள் பழுதாகி ரோட்டில் நிற்பதும் அதனால் பயணிகள் அவதிக்குள்ளாவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. நேற்று கூட பஸ்சின் சக்கரம் முழுமையாக தேய்மான நிலையில் ஓடியதால் பஞ்சராகிவிட்டது..இந்த நிலையை தவிர்க்க பஸ்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் பொருத்தப்பட வேண்டும்.

தேய்மான டயர்களை கண்டறிந்து புதிய டயர்களை பொருத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

மேலும் செய்திகள்