< Back
மாநில செய்திகள்
அச்சரப்பாக்கம் அருகே சாலையோரம் கவிழ்ந்த அரசு பஸ்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

அச்சரப்பாக்கம் அருகே சாலையோரம் கவிழ்ந்த அரசு பஸ்

தினத்தந்தி
|
14 March 2023 2:12 PM IST

அச்சரப்பாக்கம் அருகே சாலையோரம் கவிழ்ந்த அரசு பஸ்ஸில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சரப்பாக்கம் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை கும்பகோணத்தில் இருந்து 36 பயணிகளுடன் அரசு சொகுசு பஸ் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த பஸ் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடமலை புத்தூர் என்ற இடத்தில் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் மட்டும் லேசான காயம் அடைந்தனர். மற்ற பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். காயம் அடைந்த 2 பேரை மீட்டு உடனடியாக அச்சரப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து அச்சரப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்