< Back
மாநில செய்திகள்
ஆசிரியர் பணி நியமன ஆணை வாங்க சென்ற பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு
கரூர்
மாநில செய்திகள்

ஆசிரியர் பணி நியமன ஆணை வாங்க சென்ற பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு

தினத்தந்தி
|
9 April 2023 12:39 AM IST

ஆசிரியர் பணி நியமன ஆணை வாங்க சென்ற பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறித்து சென்ற ௨ பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர் பசுபதிபாளையம் ராமானுரை சேர்ந்தவர் யமுனா (வயது 28). இவர் காக்காவடி பகுதியில் செயல்படும் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்ற தேர்வாகி உள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று காலை பள்ளிக்கு சென்று பணி நியமன ஆணை ெபறுவதற்காக ராமனூரில் இருந்து பஸ்சில் காக்காவாடிக்கு சென்றார். பின்னர் காக்காவடி பஸ் நிறுத்தத்தில் இறங்கி பள்ளியை நோக்கி யமுனா நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த திருச்சி மாவட்டம் பாலையூர் பகுதியை சேர்ந்த அர்ஜுன் (27), கம்பரசம்பேட்டை பெரியார் நகர் மேல தெருவை சேர்ந்த சுதாகர் (28) ஆகியோர் யமுனாவிடம், முகவரி கேட்பதுபோல் நடித்து அவர் கழுத்தில் அணிந்த 1¼ பவுன் தங்கச்சங்கிலியை பறித்து சென்றனர். இதுகுறித்து யமுனா கொடுத்த புகாரின்பேரில், வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிந்து, அர்ஜுன், சுதாகர் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்