< Back
மாநில செய்திகள்
பெண்ணிடம் தங்கசங்கிலி பறிப்பு
திண்டுக்கல்
மாநில செய்திகள்

பெண்ணிடம் தங்கசங்கிலி பறிப்பு

தினத்தந்தி
|
4 Jan 2023 12:15 AM IST

நத்தம் அருகே கத்தியை காட்டி மிரட்டி வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 7 பவுன் தங்கசங்கிலி பறிப்பு.

நத்தம் அருகே உள்ள சிறுகுடி மேற்குத்தெருவை சேர்ந்தவர் பாண்டிமீனா (வயது 46). நேற்று காலை 9.30 மணி அளவில் இவர், தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்தார். பின்னர் பாண்டிமீனாவிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலி, ஒரு பவுன் மோதிரம் ஆகியவற்றை அவர் பறித்து கொண்டு தப்பி சென்று விட்டார்.

இதுகுறித்து நத்தம் போலீஸ் நிலையத்தில் பாண்டிமீனா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்