< Back
மாநில செய்திகள்
5 குட்டிகளை ஈன்ற ஆடு
அரியலூர்
மாநில செய்திகள்

5 குட்டிகளை ஈன்ற ஆடு

தினத்தந்தி
|
12 Oct 2022 2:21 AM IST

ஒரு ஆடு 5 குட்டிகளை ஈன்றது.

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கோடங்குடி கிராமத்தில் வசித்து வருபவர் சேட்டு. விவசாயியான இவர் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட பல்வேறு கால்நடைகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இவர் வளர்த்து வந்த ஆடு ஒன்று சினையாக இருந்தது. இதையடுத்து அந்த ஆடு 5 குட்டிகளை ஈன்றது. இதில் 3 பெட்டை குட்டிகளும், 2 ஆண் குட்டிகளும் அடங்கும். இதே ஆடு கடந்த ஆண்டு 4 குட்டிகளை ஈன்றது. அதில் ஒரு ஆட்டுக்குட்டி இறந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த ஆடு ஈன்ற 5 குட்டிகளும் நன்றாக உள்ளன. அந்த ஆட்டையும், குட்டிகளையும் கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். இதுகுறித்து தா.பழூர் கால்நடை மருத்துவர் வெற்றிவடிவேலனிடம் கேட்டபோது, 100 ஆடுகளில் 5 ஆடுகள் 4 முதல் 6 குட்டிகள் வரை ஈனும் வாய்ப்புகள் உள்ளது. சமீப காலங்களில் பரவலாக இதுபோன்று ஆடுகள் அதிக குட்டிகள் ஈனுவதாக தெரிவித்தார்.

Related Tags :
மேலும் செய்திகள்