< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
கிணற்றில் தவறி விழுந்த ஆடு உயிருடன் மீட்பு
|15 Aug 2022 12:17 AM IST
கிணற்றில் தவறி விழுந்த ஆடு உயிருடன் மீட்கப்பட்டது.
புகழூர் நாடார் தெரு பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மனைவி விஜயலட்சுமி. இவருக்கு சொந்தமான ஆடுகள் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது ேதாட்டத்தின் அருகே ேமய்ந்து கொண்டிருந்த ஆடு ஒன்று அங்குள்ள 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது. அதைப் பார்த்த விஜயலட்சுமி அக்கம்பக்கத்தினரை அழைத்து கிணற்றுக்குள் விழுந்த ஆட்டை மீட்க முயற்சி செய்தார். இருப்பினும் முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த ேவலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆட்டை பத்திரமாக மீட்டனர். பின்னர் ஆடு விஜயலட்சுமியிடம் ஒப்படைக்கப்பட்டது.