< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
5 ஆட்டுக்குட்டிகளை ஈன்ற ஆடு
|26 July 2023 12:39 AM IST
5 ஆட்டுக்குட்டிகளை ஆடு ஈன்றது.
பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் ஊராட்சி பூதன்வளவு கிராமத்தை சேர்ந்தவர் அடைக்கன் மனைவி சரசு. இவர் விவசாயம் செய்து வருவதோடு சில ஆடுகளையும் வளர்த்து வருகிறார். பொதுவாக ஆடானது 2 அல்லது 3 குட்டிகளை மட்டுமே ஈனும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக சரசுவின் ஆடானது 5 குட்டிகளை ஈன்றுள்ளது. 5 ஆட்டுக்குட்டிகளும் ஆரோக்கியமாக உள்ளன. இந்த ஆட்டுக்குட்டிகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து பார்த்து செல்கின்றனர்.