< Back
மாநில செய்திகள்
பெற்றோர் செல்போன் வாங்கி தராததால் சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை
சென்னை
மாநில செய்திகள்

பெற்றோர் செல்போன் வாங்கி தராததால் சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
21 Sept 2023 11:01 AM IST

எர்ணாவூரில் பெற்றோர் செல்போன் வாங்கி தராததால் சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

எர்ணாவூர் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் கோபி. கூலி தொழிலாளி. இவருடைய மகள் ஷாலினி (வயது 14). இவர், அருகில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷாலினி தனது பெற்றோரிடம் செல்போன் வாங்கி தருமாறு கேட்டார்.

அதற்கு அவர்கள், வீட்டில் கடன் பிரச்சினை இருப்பதால் தற்போது செல்போன் வாங்கி தர முடியாது என மறுத்தனர். இதனால் மனமுடைந்த ஷாலினி கடந்த 3 நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று பெற்றோர் வெளியே சென்றிருந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த ஷாலினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்