< Back
மாநில செய்திகள்
ஒரகடம் அருகே கிணற்றில் தவறி விழுந்து வடமாநில சிறுமி பலி
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

ஒரகடம் அருகே கிணற்றில் தவறி விழுந்து வடமாநில சிறுமி பலி

தினத்தந்தி
|
1 Jan 2023 4:03 PM IST

ஒரகடம் அருகே கிணற்றில் தவறி விழுந்து வடமாநில சிறுமி பலியானார்.

கிணற்றில் தவறி விழுந்தார்

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் சஞ்சய் குமாரி. இவருடைய மகள் குஷி குமாரி (வயது 11), இவர்கள் குடும்பத்துடன் காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வளையக்கரணை ஊராட்சியில் உள்ள உமையாள் பரணஞ்சேரி பகுதியில் தங்கியிருந்து பழைய பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்கும் தொழில் செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று சிறுமி குஷி குமாரி இவர்கள் தங்கி இருக்கும் பகுதியின் அருகே உள்ள விவசாய தரைக்கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கிணற்றில் இறங்கி சிறுமியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

போலீசார் விசாரணை

பின்னர், சிறுமியை கிணற்றிலிருந்து மேலே தூக்கி வந்து சோதித்து பார்த்தபோது சிறுமி ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒரகடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இறந்த சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமி கிணற்றில் தவறி விழுந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்