< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
ஊத்துக்கோட்டை அருகே டிராக்டர் மோதி சிறுமி பலி
|27 Sept 2022 2:57 PM IST
ஊத்துக்கோட்டை அருகே டிராக்டர் மோதியதில் சிறுமி பலியானார்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள முக்கரம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட திடீர்புரம் அன்னாவரம் காலனியை சேர்ந்தவர் பிரபு (வயது 40). விவசாயி. இவரது மகள் இலக்கியா (5). இவர் அங்குள்ள அங்கன்வாடி பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இலக்கியா தொட்டாரெட்டிகுப்பம் சாலையில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக சென்ற டிராக்டர் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.