< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலில் கிரிவலப்பாதை அமைக்க வேண்டும்
|15 Dec 2022 1:00 AM IST
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் கிரிவலப்பாதை அமைக்க வேண்டும் என்று உதவி கலெக்டரிடம், பா.ஜனதாவினர் மனு கொடுத்தனர்.
ஓசூர்:-
பா.ஜனதா கட்சியின் ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு சார்பில் மாவட்ட தலைவர் ஓம், பா.ஜனதா மாவட்ட துணைத்தலைவர் முருகன் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் ஓசூர் உதவி கலெக்டர் சரண்யாவிடம் மனு ஒன்றை ெகாடுத்தனர். அந்த மனுவில், சந்திர சூடேஸ்வரர் கோவில் மலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் செல்ல பாதை வசதி அமைத்து தரவேண்டும். ஓசூர் காளேகுண்டா பகுதியில் பாண்டுரங்க சாமி கோவிலில் வழிபாட்டிற்கான இடையூறுகளை அகற்றி மேம்பாட்டு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இடம் பெற்று இருந்தன. அப்போது மாவட்ட பொருளாளர் சீனிவாசன், மாவட்ட தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவர் கருணாநிதி, செயலாளர் சுப்பிரமணி, வீரேந்தர், வெங்கடேசலு, தேவேந்திரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.