< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
வார்டு உறுப்பினரிடம் தகராறு செய்த கும்பல்
|25 Sept 2023 3:45 AM IST
பெரியகுளம் அருகே ஆக்கிரமிப்பு செய்ததை தட்டிக்கேட்ட வார்டு உறுப்பினரிடம் ஒரு கும்பல் தகராறில் ஈடுபட்டது.
பெரியகுளம் அருகே எண்டப்புளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம், இ.புதுக்கோட்டை. இந்த கிராமத்தில் ஆண்கள் சுகாதார வளாகம் செயல்பட்டு வருகிறது. அதன் அருகில் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் சிறுவர் பூங்கா அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் அப்பகுதியில் மரக்கன்றுகளை நட்டு ஒரு கும்பல் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது. இதனை இ.புதுக்கோட்டை வார்டு உறுப்பினர் பாலு தட்டிக்கேட்டார். அப்போது அந்த கும்பலை சேர்ந்தவர்கள், பாலுவிடம் தகராறு செய்தனர். இதுகுறித்து அவர், பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறுவர் பூங்கா அமையவுள்ள இடத்தில் ஆக்கிரப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு இ.புதுக்கோட்டை பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.