< Back
மாநில செய்திகள்
வீட்டின் அருகே மது குடிப்பதை தட்டிக்கேட்ட வாலிபரை பீர்பாட்டிலால் தாக்கிய கும்பல்
மாநில செய்திகள்

வீட்டின் அருகே மது குடிப்பதை தட்டிக்கேட்ட வாலிபரை பீர்பாட்டிலால் தாக்கிய கும்பல்

தினத்தந்தி
|
18 March 2023 9:41 AM IST

வீட்டின் அருகே மது குடிப்பதை தட்டிக்கேட்ட வாலிபரை பீர்பாட்டிலால் தாக்கிய 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை புளியந்தோப்பு பார்த்தசாரதி தெருவைச் சேர்ந்தவர் அஜித் (வயது 24). ஏ.சி. மெக்கானிக். இவர், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் அருகே அதே பகுதியைச் சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பல் மது அருந்தி கொண்டிருப்பதை கண்டார். அவர்களிடம் எதற்காக எங்கள் வீட்டின் அருகே மது அருந்துகிறீர்கள்? என தட்டிக்கேட்டார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 6 பேர் கொண்ட கும்பல் அஜித்தை பீர் பாட்டிலால் தாக்கி விட்டு தப்பிச் சென்றனர். இது குறித்த புகாரின்பேரில் புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமார் (21), சதீஷ் (19), சஞ்சய் (19), ஆகாஷ் (23), சூர்யா (19) மற்றும் கடா சஞ்சய் (20) ஆகிய 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்