< Back
மாநில செய்திகள்
காசிமேட்டில் வெளிநாட்டு ஆந்தை சிக்கியது
சென்னை
மாநில செய்திகள்

காசிமேட்டில் வெளிநாட்டு ஆந்தை சிக்கியது

தினத்தந்தி
|
11 April 2023 10:23 AM IST

காசிமேட்டில் சிக்கிய வெளிநாட்டு ஆந்தையை தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

சென்னை காசிமேடு இந்திரா நகரில் உள்ள அங்கன்வாடியில் சிறு குழந்தைகள் படித்து வருகின்றனர். நேற்று அந்த கட்டிடத்தில் ஒரு அறை அருகில் உள்ள படிக்கட்டு பகுதியில் வித்தியாசமாக பறவை ஒன்று இருந்தது. இதை பார்த்து அங்கன்வாடியில் வேலை பார்க்கும் ஊழியர்கள், தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக திருவொற்றியூர் தீயணைப்பு அலுவலர் முருகானந்தம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று அங்கன்வாடி கட்டிடத்தில் தொங்கிகொண்டிருந்த பறவையை லாவகமாக பிடித்தனர். பின்னர் சோதனை செய்ததில் அது ஆஸ்திரேலிய நாட்டு ஆந்தை என்பது தெரிந்தது. தீயணைப்பு வீரர்கள் பிடிபட்ட அந்த ஆஸ்திரேலிய ஆந்தையை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்