சென்னை தீவுத்திடலில் உணவுத்திருவிழா தொடங்கியது
|சென்னை தீவுத்திடலில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் 3 நாட்கள் உணவுத்திருவிழா நடத்தப்படுகிறது.
சென்னை,
உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை சார்பில் சென்னை தீவுத்திடலில் 3 நாள் உணவுத்திருவிழா நடைபெறுகிறது.
உணவுத்திருவிழாவை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர். உணவுத் திருவிழாவில் பாரம்பரிய உணவு வகைகளை வெளிப்படுத்தும் விதமாக 150 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது.
உணவு வீணாகுவதை தடுக்க வேண்டிய வழிமுறைகள், எந்த வகை உணவுகளை சாப்பிடுவது நல்லது என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களும் இங்கு எடுத்துரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாரம்பரிய உணவு வகைகள், உணவு சார்ந்த போட்டிகள், கலைநிகழ்ச்சிகளும் இங்கு நடைபெற உள்ளது. 14-ந்தேதி காலை 7 மணியளவில் உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடைபயணம் நடத்தப்படுகிறது. இந்த உணவு திருவிழாவில் திரைக்கலைஞர்கள், பிரபலங்கள் பலர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.