அரியலூர்
வயலில் தீப்பற்றி கரும்புகள் எரிந்து நாசம்
|வயலில் தீப்பற்றி கரும்புகள் எரிந்து நாசமானது.
செந்துறை:
வயலில் தீப்பற்றியது
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள இலங்கைச்சேரி கிராமத்தில் 100 நாள் திட்டத்தில் பணிகள் நடைபெற்றது. அப்போது பெரிய ஏரியில் உள்ள கருவேல செடிகளை வெட்டிய தொழிலாளர்கள், அவற்றை தீ வைத்து கொளுத்தினர். அப்போது காற்று பலமாக வீசியது.
இதனால் தீப்பொறி பறந்து அருகே இருந்த முருகையன் என்பவரது கரும்பு வயலில் தீப்பற்றியது. இதனைக் கண்ட 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள், தீயை அணைக்க போராடினர். ஆனால் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் வயல் முழுவதும் தீ மளமளவென பரவியது.
கரும்புகள் நாசம்
இதனால் ஒரு ஏக்கர் பரப்பளவில் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான கரும்புகள் எரிந்து நாசமடைந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த செந்துறை தீயைணப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்து, கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.