< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
தைல மரக்காட்டில் தீ விபத்து
|16 Feb 2023 12:57 AM IST
தைல மரக்காட்டில் தீ விபத்து ஏற்பட்டது.
கந்தர்வகோட்டை தாலுகா ராசாப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமராஜ். விவசாயி. இவரது தைல மரக்காட்டில் மின்கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்தது. மேலும் தைல மரங்களும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனை அந்த வழியாக சென்ற வழவம்ட்டியை சேர்ந்த சந்திரசேகர் மற்றும் கீர்த்திவாசன் ஆகிய இருவரும் பார்த்து கந்தர்வகோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அவர்கள் தீயணைப்பு துறையினர் வரும் வரை தீ மேலும் பரவாமல் மரக்கிளையை கொண்டு தீயை அணைத்து கொண்டிருந்தனர். இதையடுத்து அங்கு வந்த கந்தர்வகோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் குமரேசன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். மேலும் தீ பரவாமல் தடுத்தனர்.