< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
பூதப்பாண்டி அருகே குளத்தின் நடுவே பற்றி எரிந்த தீ
|23 Jan 2023 2:28 AM IST
பூதப்பாண்டி அருகே குளத்தின் நடுவே தீ பற்றி எரிந்தது.
அழகியபாண்டியபுரம்:
பூதப்பாண்டி அருகே உள்ள அரசன்குழி பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சேங்குளம் உள்ளது. இந்த குளத்தில் புதர் மண்டி செடிகள், கொடிகள் படர்ந்து புதர் மண்டி காணப்பட்டது. இந்த குளத்தை தூர்வார கோரிக்கை விடுத்த வந்த நிலையில் நேற்று மதியம் திடீரென குளத்தில் உள்ள செடி, கொடிகளில் தீ பற்றி எரிந்தது. இதுபற்றி நாகர்கோவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர். இதனால் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் தெரிவிக்கும்போது, கடந்த பல ஆண்டுகளாக இந்த குளம் தூர்வாரப்படாமல் உள்ளது. எனவே குளத்தை தூர்வாரி குளத்தின் கரையை சுற்றி தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.