< Back
மாநில செய்திகள்
அர்ச்சகர் வீட்டில் தீப்பற்றியதில் பொருட்கள் எரிந்து நாசம்
அரியலூர்
மாநில செய்திகள்

அர்ச்சகர் வீட்டில் தீப்பற்றியதில் பொருட்கள் எரிந்து நாசம்

தினத்தந்தி
|
21 Dec 2022 12:10 AM IST

அர்ச்சகர் வீட்டில் தீப்பற்றியதில் பொருட்கள் எரிந்து நாசமானது.

செந்துறை:

அரியலூர் மாவட்டம், செந்துறை சுந்தராநகரில் வசித்து வருபவர் ரவி என்ற ரவிச்சந்திரன். இவர் ராயபுரம் கிராமத்தில் உள்ள ராஜகம்பீஸ்வரர் கோவிலில் அர்ச்சகராக உள்ளார். நேற்று இவர், தனது மனைவி ஜோதிலெட்சுமியுடன் வெளியே சென்றிருந்தார். அப்போது அவரது வீட்டின் உள்ளே இருந்து புகை வெளியேறியுள்ளது. மேலும் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் செந்துறை தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நிலைய அதிகாரி அழகானந்தம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சரவணன், செந்தமிழ்செல்வன், அருட்செல்வன், தினேஷ் உள்ளிட்டோர் அங்கு வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள், ஆதார் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டது? அல்லது வேறு என்ன காரணத்தினால் தீ விபத்து ஏற்பட்டது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்