< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு அடுத்த மகேந்திராசிட்டி பகுதியில் ஐபோன் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து
மாநில செய்திகள்

செங்கல்பட்டு அடுத்த மகேந்திராசிட்டி பகுதியில் ஐபோன் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து

தினத்தந்தி
|
25 Sept 2023 1:03 AM IST

செங்கல்பட்டு அடுத்த மகேந்திராசிட்டி பகுதியில் ஐபோன் 14 மற்றும் 15 உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திராசிட்டி பகுதியில் தனியார் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் பல்வேறு இடங்களில் தயாரிக்கப்படக்கூடிய ஐபோன் 14 மற்றும் 15 ஆகிய செல்போன்களின் உதிரி பாகங்கள் இங்கு ஒன்றிணைக்கப்பட்டு செல்போனாக புதுப்பிக்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இந்த தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தொழிற்சாலையிலிருந்து கரும்புகை வெளியேறியது. இதைக்கண்ட தொழிற்சாலையின் பாதுகாவலர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து செங்கல்பட்டு மற்றும் மகேந்திராசிட்டி பகுதியில் இருந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நிறுவனத்திற்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தீயானது தற்போது கட்டுக்குள் வந்துள்ளதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்