< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
மின்வாரிய அலுவலகத்தில் தீ விபத்து
|20 April 2023 12:20 AM IST
மின்வாரிய அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடுமையான வெயிலால் செடிகள் கருகியுள்ளது. இந்த நேரங்களில் பல இடங்களிலும் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதேபோல நேற்று மதியம் கீரமங்கலம் மின்வாரிய அலுவலகம் அருகே தரிசு நிலத்தில் உள்ள கருகிய செடிகளில் ஏற்பட்ட தீ படிப்படியாக மின்வாரிய அலுவலகம் உள்ள பகுதி பக்கமும் பரவியது. இதுகுறித்து மின்வாரிய அலுவலர்கள் கீரமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.