< Back
மாநில செய்திகள்
மோட்டார் உதிரிபாகங்கள் விற்கும் கடையில் தீவிபத்து
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

மோட்டார் உதிரிபாகங்கள் விற்கும் கடையில் தீவிபத்து

தினத்தந்தி
|
11 Jan 2023 4:04 PM IST

மோட்டார் உதிரிபாகங்கள் விற்கும் கடையில் தீவிபத்து ஏற்பட்டது.

தூசி

மோட்டார் உதிரிபாகங்கள் விற்கும் கடையில் தீவிபத்து ஏற்பட்டது.

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தை சேர்த்தவர் டில்லிபாபு. இவர் மாங்கால் கூட்ரோட்டில் மோட்டார் உதிரிபாகம் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு டில்லிபாபு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் டில்லிபாபுவின் கடையில் திடீரென தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது. தகவலறிந்த டில்லிபாபு கடைக்கு சென்று தீயை அணைக்க முயன்றார்.

இது குறித்து அவர் செய்யாறு மற்றும் காஞ்சீபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்தது. மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இது குறித்து தூசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

மேலும் செய்திகள்