மயிலாடுதுறை
தனியார் வங்கியில் தீவிபத்து
|சீர்காழியில் தனியார் வங்கியில் தீவிபத்து ஏற்பட்டது.
சீர்காழி:
சீர்காழியில் உள்ள ஒரு தனியார் வங்கியின் பேட்டரி பாதுகாப்பு அறையில் இருந்து நேற்று திடீரென புகை வந்துள்ளது. அதனை அணைக்க ஊழியர்கள் முயன்ற போது வங்கியில் தீப்பிடித்தது. இந்த தீ வங்கி முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. உடனடியாக வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அங்கிருந்து வெளியேறினர். கட்டிடத்தில் புகை வெளியேறுவதற்கான வழி இல்லாத நிலையில் வங்கி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீவிபத்து ஏற்பட்டவுடன் துரிதமாக செயல்பட்டு வாடிக்கையாளர்களை வெளியேற்றியதுடன் வங்கி ஊழியர்களும் வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தீயணைக்கப்பட்டதால் பலகோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் பணமும் தப்பியது.இதனால் வங்கி ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் நிம்மதியடைந்தனர்.