செங்கல்பட்டு
பெரும்பாக்கத்தில் வீட்டில் 'பிரிட்ஜ்' வெடித்து தீ விபத்து; பொருட்கள் எரிந்து சேதம்
|பெரும்பாக்கத்தில் வீட்டில் ‘பிரிட்ஜ்’ வெடித்து தீ விபத்து; பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது.
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 'சி-பிளாக்' 4-வது மாடியில் வசிப்பவர் கீதா. இவர் வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்தோடு வெளியில் சென்று இருந்தார். இந்த நிலையில் மதியம் வீட்டின் ஜன்னல் வழியாக புகை வருவதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து கொண்டிருந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மேடவாக்கம் தீயணைப்பு துறையினர் தீயை போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தில் பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் ஆடைகள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சாம்பலாயின.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், வீட்டில் இருந்த பிரிட்ஜ் பழுதடைந்ததால் அதிலிருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இந்த தீ விபத்து குறித்து பெரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.