< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
திருத்தங்கல் அருகே அட்டை மில்லில் தீ விபத்து
|7 Oct 2023 2:02 AM IST
திருத்தங்கல் அருகே அட்டை மில்லில் தீ விபத்து ஏற்பட்டது.
திருத்தங்கல் அருகே உள்ள சுக்கிரவார்பட்டியில் தனியார் அட்டை மில் உள்ளது. இந்த அட்டை மில்லின் ஒரு பகுதியில் நேற்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு துறையினர் தீயணைப்பு நிலைய அதிகாரி வெங்கடேசன் தலைமையில் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ மள மள வென்று பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதனால் தீயணைக்கும் பணியில் பாதிப்பு ஏற்பட்டது. 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இதற்காக பல டிராக்டர்களில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு பயன்படுத்தப்பட்டது. இந்த தீ விபத்து குறித்து திருத்தங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.