< Back
மாநில செய்திகள்
பழைய வண்ணாரப்பேட்டையில் தனியார் பள்ளியில் தீ விபத்து
சென்னை
மாநில செய்திகள்

பழைய வண்ணாரப்பேட்டையில் தனியார் பள்ளியில் தீ விபத்து

தினத்தந்தி
|
28 March 2023 10:11 AM IST

பழைய வண்ணாரப்பேட்டையில் தனியார் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ஜி.ஏ. ரோட்டில் தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். தற்போது 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மின்கசிவால் இந்த பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது. வகுப்பறையில் உள்ள மின்பெட்டியில் தீ்ப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த காவலாளி சண்முகம் உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் முதலில் மின்சாரத்தை துண்டித்தனர். பின்னர் தீயை அணைத்தனர்.

தற்போது பொதுத்தேர்வு நடப்பதால் உடனடியாக தீயில் எரிந்த மின்சாதன பொருட்களை மாற்றி புதிய மின்சாதன பொருட்கள் பொருத்தப்பட்டது. தீ விபத்து குறித்து ராயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்