< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
பெரியமேட்டில் மின்விளக்கு விற்பனை கடையில் தீ விபத்து
|25 Oct 2023 6:17 PM IST
பெரியமேட்டில் மின்விளக்கு விற்பனை கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை பெரியமேடு, ராஜா முத்தையா சாலையில் 2 மாடி வணிக வளாகம் உள்ளது. இதில், முதல் மாடியில் தினேஷ் என்பவர் கேமரா உதிரிபாகங்கள் மற்றும் மின்விளக்கு விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் கடையில் இருந்து திடீரென கரும்புகை வெளியேற தொடங்கியது. சிறிது நேரத்திலேயே தீப்பிடித்து மளமளவென கடை முழுவதும் பரவியது.
இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, எக்ஸ்பிளனேடு, வியாசர்பாடி, வ.உ.சி. நகர் ஆகிய பகுதிகளில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் போராடி தீயணை அனைத்தனர். இந்த சம்பவம் குறித்து பெரியமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.