< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
சென்னை கீழ்ப்பாக்கத்தில் வங்கியின் வாகன நிறுத்தத்தில் தீ விபத்து
|22 Sept 2022 7:48 AM IST
சென்னை கீழ்ப்பாக்கத்தில் வங்கியின் வாகன நிறுத்தத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை கீழ்ப்பாக்கம் நேரு பார்க் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள தனியார் வங்கியின் தரை தளத்தில் நேற்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தரை தளத்தில் இருக்கும் வாகன நிறுத்துமிடத்தில் உள்ள மின்சார அறையில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து வங்கி ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதற்கிடையே வங்கி ஊழியர்களே துரிதமாக செயல்பட்டு தீ அணைப்பான் கருவியை கொண்டு தீயை அணைக்க முயன்றனர். தகவலின் பேரில் விரைந்து வந்த கீழ்ப்பாக்கம் தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைத்து மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர். வங்கியில் உள்ள 'பேட்டரி இன்வெர்ட்டரில்' மின்கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.