கன்னியாகுமரி
கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
|சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி கடைக்கு நுகர்வோர் கோட்டு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தது.
நாகர்கோவில்:
சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி கடைக்கு நுகர்வோர் கோட்டு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தது.
நாகர்கோவில் அருகே உள்ள சுங்கான்கடை பகுதியை சேர்ந்தவர் ஜெயசேகர். இவர் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் உள்ள ஒரு கடையில் கியாஸ் அடுப்பு வாங்கியுள்ளார். ஆனால் அதை வீட்டில், கடைக்காரர் சரியாக அமைத்து தராததால் கியாஸ் அடுப்பில் கரையான் ஏற்பட்டுள்ளது. எனவே இதை சரிசெய்து தரும்படி கடைக்காரரை அணுகியுள்ளார். கடைக்காரர் சரி செய்து கொடுக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான ஜெயசேகர் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் விசாரித்தனர்.
இந்த நிலையில் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி சம்பந்தப்பட்ட கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து அதை ஜெயசேகருக்கு நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று தலைவர் சுரேஷ் மற்றும் உறுப்பினர் சங்கர் ஆகியோர் உத்தரவிட்டனர். மேலும் வழக்கு செலவு தொகை ரூ.2,500 மற்றும் அபராத தொகையை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.