நீலகிரி
பிளாஸ்டிக் பொருட்கள் விற்றவர்களுக்கு ரூ.3,200 அபராதம்
|ஊட்டியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்றவர்களுக்கு ரூ.3,200 அபராதம் விதிக்கப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதி மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் பைகள், கப்புகள், டம்ளர்கள், முலாம் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் வாழை இலை வடிவத்தாள்கள், பிளாஸ்டிக் தோரணங்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் உள்பட 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யப்படுகிறதா என துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து சோதனை செய்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் நேற்று ஊட்டி நகராட்சி சுகாதார ஆய்வாளர் மற்றும் ஊழியர்கள் ஊட்டி தாவரவியல் பூங்கா பகுதியில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு உள்ளதா என சோதனை நடத்தினர். கடைகளில் பழங்களை பேக்கிங் செய்ய பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்தது தெரியவந்தது. தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த உரிமையாளர்களுக்கு ரூ.3,200 அபராதம் விதித்தனர். பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது