< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
சாலையில் இறந்து கிடந்த பெண் மயில்
|14 Nov 2022 12:00 AM IST
சாலையில் பெண் மயில் இறந்து கிடந்தது.
சென்னை-தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள சாலையில் நேற்று முன்தினம் மாலை பெண் மயில் ஒன்று இறந்து கிடந்தது. இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் அந்த மயிலை மீட்டு, கால்நடை டாக்டர்கள் மூலம் பரிசோதனை செய்து, வனப்பகுதியில் கொண்டு புதைத்தனர். அடையாளம் தெரியாத வாகனம் மோதி மயில் இறந்திருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.