கடலூர்
தனியார் நிறுவன பெண் ஊழியர் விஷம் குடித்து தற்கொலை
|கடலூரில் தனியார் நிறுவன பெண் ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர் முதுநகர்,
கடலூர் புதுவண்டிப்பாளையம் பி.எஸ்.எம்.நகரை சேர்ந்தவர் கனகராஜ். இவருடைய மனைவி ஸ்ரீமதி (வயது 34). இவர் கடந்த 5 ஆண்டுகளாக முதுநகர் சங்கொலிக்குப்பத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காசாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த 1 மாதமாக வேலைக்கு செல்லவில்லை. கனகராஜ், ஸ்ரீமதியிடம் நீ வேலைக்கு செல்ல வேண்டாம். வீட்டிலேயே இரு என்று கூறியதால் மனஉளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஸ்ரீமதி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி கனகராஜ் கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.