பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை
|வீட்டில் தனியாக இருந்த மகளுக்கு தந்தை பாலியல் தொல்லை கொடுத்தார்.
குளச்சல்,
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே ஒரு உள்ள மீனவ கிராமத்தை சேர்ந்த 42 வயதுடைய மீனவர் கடலில் மீன் பிடித்தொழில் செய்து வருகிறார். இவருக்கு மனைவியும், ஒரு மகனும், 15 வயதில் ஒரு மகளும் உள்ளனர். மகள் குளச்சலில் ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு தேர்வாகி உள்ளார்.
சம்பவத்தன்று சிறுமியின் தாயார், தனது சகோதரி வீட்டுக்கு சென்றார். சிறுமியின் அண்ணன் நண்பர்களுடன் வெளியே சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு தந்தை பாலியல் தொல்லை கொடுத்தார். இதுபோல் இன்னொரு நாள் பாலியல் தொல்லை கொடுக்க முயன்றபோது வெளியே சென்றிருந்த சிறுமியின் தாயார் வீட்டுக்கு வந்தார். அவர் கணவரின் செய்கையை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து சிறுமி குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பத்மாவதி சிறுமியின் தந்தை மீது போக்சோ உள்பட 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதற்கிடையே சிறுமியின் தந்தை தலைமறைவாகி விட்டார். அவரை தனிப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.
பெற்ற மகளுக்கு தந்தையே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.