< Back
மாநில செய்திகள்
மயிலாடுதுறை அருகே விவசாயி மயங்கி விழுந்து உயிரிழப்பு
மாநில செய்திகள்

மயிலாடுதுறை அருகே விவசாயி மயங்கி விழுந்து உயிரிழப்பு

தினத்தந்தி
|
6 Nov 2023 12:32 AM IST

மயிலாடுதுறை அருகே விவசாய தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை அருகே விவசாய தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தார். கோடங்குடி பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் வயலில் யூரியா தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் வயலிலேயே மயங்கி விழுந்தார்.

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராஜா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்