< Back
மாநில செய்திகள்
அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி பலி
திருச்சி
மாநில செய்திகள்

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி பலி

தினத்தந்தி
|
28 May 2023 3:20 AM IST

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி உயிரிழந்தார்.

முசிறி:

விவசாயி சாவு

முசிறி அருகே சின்ன வேளகாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல்(வயது 67). விவசாயி. நேற்று முன்தினம் இரவு முசிறி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது வீசிய காற்றில் வேளகாநத்தம் கிராமத்தில் மின்கம்பி ஒன்று அறுந்து விழுந்தது.

இந்நிலையில் அந்த வழியாக சென்ற தங்கவேல், கீழே மின்கம்பி அறுந்து கிடந்ததை கவனிக்காத நிலையில், அதனை மிதித்துள்ளார். இதில் உடலில் மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே தங்கவேல் சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இது குறித்து தகவல் அறிந்த முசிறி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, தங்கவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்