< Back
மாநில செய்திகள்
குடிபோதையில் தீக்குளித்த தொழிலாளி
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

குடிபோதையில் தீக்குளித்த தொழிலாளி

தினத்தந்தி
|
18 July 2023 2:45 AM IST

குடிபோதையில் தீக்குளித்த தொழிலாளி

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலாம்பட்டியை சேர்ந்தவர் ஆறுச்சாமி(வயது 56). கூலி தொழிலாளி. இவர் தனது குடும்பத்தினருடன் வசிக்காமல், தனியாக வசித்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் ஆறுச்சாமி தன்னை குடும்பத்தினர் கவனிக்கவில்லை என்றுக்கூறி குடிபோதையில் தனக்கு தானே உடலில் மண் எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்