< Back
மாநில செய்திகள்
என்னையே நீ கீழ தள்ளி விட்டுட்டியா..? ஆத்திரத்தில் பைக்கை பெட்ரோல் ஊற்றி எரித்த போதை ஆசாமியால் பரபரப்பு
மாநில செய்திகள்

'என்னையே நீ கீழ தள்ளி விட்டுட்டியா..?' ஆத்திரத்தில் பைக்கை பெட்ரோல் ஊற்றி எரித்த போதை ஆசாமியால் பரபரப்பு

தினத்தந்தி
|
10 Aug 2023 9:17 PM IST

மது போதையில் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்த போதை இளைஞர், ‘என்னையே நீ கீழ தள்ளி விட்டுட்டியா..?’ என்ற கோவத்தில் வாகனத்துக்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர்,

கடலூரில் உள்ள பாரதி சாலையில் இன்று பிற்பகல் நேரத்தில் நிரம்ப குடித்த குடிமகன் ஒருவர் தனது இரு சக்கர வாகனத்தில் பயணித்துள்ளார். துவக்கம் முதலிலேயே தள்ளாடி தள்ளாடி சென்ற அவர், ஒரு கட்டத்தில் பாரதி சாலை அருகே வரும் பொழுது தனது பைக்கில் இருந்து சறுக்கி கீழே விழுந்துள்ளார்.

அவர் சறுக்கி விழுந்ததால் ஏற்பட்ட அதிர்வில் அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் உடைந்துள்ளது. இந்நிலையில் அதிலிருந்து பெட்ரோலும் கசிய தொடங்கியுள்ளது. ஆனால் குடிபோதையில் கீழே விழுந்து விட்டு, பெட்ரோல் சிந்திக் கொண்டிருக்கும் பைக்கை எடுத்து அதை சரி செய்யாமல் சாலையில் தெளிவாக சென்ற "எண்ணையா கீழே தள்ளி விடுகிறாய்" என்ற வகையில் அந்த நபர் கோபத்தில் பெட்ரோல் லீக் ஆகி கொண்டிருந்த அந்த வண்டியின் டேங்கின் மீது தீ வைத்து மொத்த வண்டியையும் எரித்துள்ளார் அந்த குடிமகன்.

கடலூர் மாவட்டம் பாரதி சாலையில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடத்தில், ஒரு இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்த நிலையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் எரிந்து கொண்டிருந்த பைக்கை அனைத்து மேற்கொண்டு ஏதும் சேதம் ஏற்படாமல் காத்துள்ளனர்.

போதையில் ஒரு நபர் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் தனது பைக்கின் கொளுத்திய சம்பவம் கடலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்