ஆண்டாள் கோவிலை திடீரென வட்டமடித்த டிரோன் - ஸ்ரீவில்லிபுத்தூரில் பரபரப்பு
|ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ராஜ கோபுரத்தைச் சுற்றி டிரோன் வட்டமடித்ததையடுத்து போலீசார் 2 இளைஞர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விருதுநகர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ராஜ கோபுரத்தைச் சுற்றி டிரோன் வட்டமடித்ததையடுத்து போலீசார் 2 இளைஞர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் கோபுரம் மற்றும் கோவில் வளாகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும், தங்க விமானத்தை பாதுகாக்கும் பணியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்று மாலை நேரத்தில் டிரோன் ஒன்று, கோவில் மேல் பகுதி, தங்க விமானம், ராஜ கோபுரத்தை சில நிமிடங்கள் வட்டமடித்தது.
இதையடுத்து, பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார், டிரோனை தேடினர். சில நிமிடங்களிலேயே டிரோன் அந்த இடத்திலிருந்து மறைந்தது. இது தொடர்பாக போலீசார் இரண்டு இளைஞர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.