கள்ளக்குறிச்சி
நகரின் மையப்பகுதியில் அறுந்து விழுந்த மின் கம்பி
|உளுந்தூர்பேட்டையில் நகரின் மையப்பகுதியில் அறுந்து விழுந்த மின் கம்பி பொதுமக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை நகராட்சிபகுதிக்குட்பட்ட விருத்தாசலம் சாலை சந்திப்பில் நகரின் மையப்பகுதிக்கு மின்சார வினியோகம் செய்வதற்காக அமைக்கப்பட்ட கம்பத்திலிருந்த உயரழுத்த மின் கம்பி ஒன்று நேற்று மாலை திடீரென அறுந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அப்போது அங்கு ஆட்கள் மற்றும் வியாபாரிகள் யாரும் வந்து செல்லாததால் உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை. பின்னர் இது குறித்து பொதுமக்கள் உடனடியாக மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் மின்வாரிய ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு மின்சாரத்தை நிறுத்தினர். பின்னர் அவர்கள் கடைவீதிக்கு விரைந்து வந்து அறுந்து விழுந்த மின் கம்பியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு மின் கம்பி சீரமைக்கப்பட்டது. நகரின் மையப்பகுதியில் உயரழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.