< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை, ராயபுரத்தில் 28 பேரை கடித்த நாய்க்கு ரேபிஸ் தொற்று இருப்பது உறுதி
|24 Nov 2023 9:22 AM IST
சென்னை முழுவதும் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை ராயபுரத்தில் தெருநாய் ஒன்று பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என்று 28 பேரை கடித்து குதறியது. இதையடுத்து அந்த நாய் கல்லால் அடித்து கொல்லப்பட்டது. இந்த நிலையில் அந்த நாய்க்கு செய்யப்பட்ட உடற்கூராய்வில் ரேபிஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
இதையடுத்து நாய் கடித்து சிகிச்சை பெற்றுவரும் அனைவரும் 5 டோஸ் தடுப்பூசி கட்டாயம் செலுத்திக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சென்னை முழுவதும் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த வருடம் 16 ஆயிரம் நாய்கள் பிடிக்கப்பட்டு, ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது. நடப்பாண்டில் இதுவரை 17,813 நாய்களை பிடித்து ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.