< Back
மாநில செய்திகள்
வீடு தேடி வரும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்று
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

வீடு தேடி வரும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்று

தினத்தந்தி
|
14 July 2022 7:04 PM GMT

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியர்களுக்கு வீடு தேடி வரும் உயிர்வாழ் சான்றிதழ் தபால்காரர் மூலம் வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியர்களுக்கு வீடு தேடி வரும் உயிர்வாழ் சான்றிதழ் தபால்காரர் மூலம் வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

உயிர்வாழ் சான்றிதழ்

மாநில அரசு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அவர்களது வீட்டு வாசலிலேயே டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை தபால்காரர்கள் மூலம் சமர்பிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் கடந்த 1-ந் தேதி முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ஏற்பாடுகள் இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் தலைமை அஞ்சலகம், துணை, கிளை அஞ்சலகங்களில் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேரில் சென்று உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக, ஜீவன்பிரமான் திட்டத்தின் மூலம், அஞ்சல் துறையின் கீழ்செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி ஓய்வூதியதாரர்களின் வீட்டு வாசலிலேயே, பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி, டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு சேவைகட்டணமாக ரூ.70 மட்டும் தபால்காரரிடம் செலுத்தினால் போதும்.

575 பேர் பயன் அடைந்தனர்

ஓய்வூதியர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார், மொபைல் எண், பி.பி.ஓ. எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல்ரேகை பதிவு செய்தால், ஒருசிலநிமிடங்களில், டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும்.

இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 10,165 மாநில ஓய்வூதியதாரர்களில் 575 பேர் மட்டுமே பயனடைந்துள்ளனர். எனவே அஞ்சலக சிறப்பு ஏற்பாடுகளை ஓய்வூதியதாரர்கள் சிரமமின்றி பயன்படுத்தி கொண்டு எளிய முறையில் தங்களின் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்து கொள்ளலாம்.

இந்த தகவலை ராமநாதபுரம் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் சித்ரா தெரிவித்துள்ளார்.

Related Tags :
மேலும் செய்திகள்