< Back
மாநில செய்திகள்
விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருப்பூர்
மாநில செய்திகள்

விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
26 Oct 2023 4:54 PM IST

விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போடிப்பட்டி

மடத்துக்குளம் பகுதியில் 100 நாள் வேலைத் திட்டத்தில் சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முறைகேடுகள்

கிராமப்புற தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக 100 நாள் வேலைத் திட்டம் உள்ளது. இந்த திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், சமீப காலங்களாக சம்பளம் உரிய நேரத்தில் வழங்கப்படுவதில்லை என்றும் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பயன்பெறும் தொழிலாளர்களின் நலனைக் காக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மடத்துக்குளம் ஒன்றிய அலுவலகம் முன் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு முத்துச்சாமி தலைசாமி தாங்கினார். கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.

அனைவருக்கும் வேலை

ஆர்ப்பாட்டத்தின் போது ' மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 3 மாதங்களுக்கு மேல் சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.அதனை உடனடியாக வழங்க வேண்டும்.சட்டக்கூலி ரூ. 294-ஐ முழுமையாக வழங்க வேண்டும்.வேலை கேட்டு விண்ணப்பித்து அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்குவதுடன், அனைத்து தொழிலாளர்களுக்கும் தொடர்ச்சியாக 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும்.வேலை செய்யும் இடத்தில் அனைத்து தொழிலாளர்களும் பாகுபாடில்லாமல் சமமாக நடத்தப்பட வேண்டும்.இந்த திட்டத்தில் உள்ள பயனாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப ஒதுக்கப்படும் நிதியை அதிகப்படுத்த வேண்டும்'என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.


மேலும் செய்திகள்