< Back
மாநில செய்திகள்
கிணற்றில் விழுந்த மான் உயிருடன் மீட்பு
திருச்சி
மாநில செய்திகள்

கிணற்றில் விழுந்த மான் உயிருடன் மீட்பு

தினத்தந்தி
|
12 Oct 2023 1:36 AM IST

கிணற்றில் விழுந்த மான் உயிருடன் மீட்கப்பட்டது.

தா.பேட்டை அருகே அஞ்சலம் கிராமத்தில் வழித்தவறி வந்த மான் ஒன்று அங்குள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்த முசிறி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அலுவலர் கர்ணன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் கயிறு மூலம் இறங்கி உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த மானை பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் வனத்துறை அலுவலர்கள் அந்த மானை தும்பலம் வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர்.

மேலும் செய்திகள்