< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
எஸ்.பி.வேலுமணி அளித்துள்ள கடிதம் மீது பரிசீலித்து முடிவெடுக்கப்படும் - சபாநாயகர் அப்பாவு
|19 July 2022 1:08 PM IST
எஸ்.பி.வேலுமணி அளித்துள்ள கடிதம் மீது பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
சென்னை,
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எதிர்க்கட்சி துணைத்தலைவராக நியமிக்கபட்டு உள்ளார். துணைச் செயலாளராக அக்ரி எஸ்.எஸ் கிருஷ்ணமூர்த்தி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதுகுறித்து சபாநாயகர் அலுவலகத்தில் அ.தி.மு.க. கொறடா எஸ்.பி. வேலுமணி கடிதம் அளித்துள்ளார்.
இந்த நிலையில், எஸ்.பி.வேலுமணி அளித்துள்ள கடிதம் குறித்து சபாநாயகர் அப்பாவு கூறுகையில்,
எஸ்.பி.வேலுமணி அளித்துள்ள கடிதம் மீது பரிசீலித்து முடிவெடுக்கப்படும். எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நியாயமான வகையில் எந்த விதமான ஒருதலைச் சார்புமின்றி முடிவு எடுக்கப்படும். ஓ.பன்னீர்செல்வம் அளித்த மனுவும் பரிசீலனையில் உள்ளது என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.