< Back
மாநில செய்திகள்
இறந்து கிடந்த சிறுத்தைப்பூனை
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

இறந்து கிடந்த சிறுத்தைப்பூனை

தினத்தந்தி
|
17 Aug 2023 1:30 AM IST

இறந்து கிடந்த சிறுத்தைப்பூனை

வால்பாறை

வால்பாறை கருமலை எஸ்டேட் 10-ம் ெநம்பர் தேயிலை தோட்ட பகுதியில் உரம் போடும் பணிக்காக தொழிலாளர்கள் சென்றனர். அப்போது தேயிலை செடிகளுக்கு மத்தியில் சிறுத்தைப்பூனை ஒன்று இறந்து கிடப்பதை பார்த்தனர். இதுகுறித்து வால்பாறை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் உதவி வனப்பாதுகாவலர் செல்வம் தலைமையில் வனச்சரகர் வெங்கடேஷ், கால்நடை டாக்டர் சுகுமார் விரைந்து வந்து இறந்து கிடந்த சிறுத்தைப்பூனையை பார்வையிட்டு, பிரேத பரிசோதனை செய்தனர். தொடர்ந்து அதன் உடல் தீ வைத்து எரிக்கப்பட்டது.இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், இறந்து கிடந்த 2 வயது ஆண் சிறுத்தைப்பூனை மற்ற வனவிலங்குடன் சண்டையிட்டபோது உடலில் பலத்த காயமடைந்து இறந்து உள்ளது என்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்