< Back
மாநில செய்திகள்
முகம் சிதைந்த நிலையில் கிடந்த பிணம்:விபத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்த பரிதாபம்
தேனி
மாநில செய்திகள்

முகம் சிதைந்த நிலையில் கிடந்த பிணம்:விபத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்த பரிதாபம்

தினத்தந்தி
|
9 Oct 2023 12:15 AM IST

வீரபாண்டி அருகே சாலையோரம் முகம் சிதைந்த நிலையில் கிடந்த பிணமாக கிடந்தவர் தொழிலாளி என்பது தெரியவந்தது.

வீரபாண்டியை அடுத்த எஸ்.பி.எஸ் காலனி பஸ் நிறுத்தம் அருகே கடந்த 6-ந்தேதி சுமார் 35 வயது வாலிபர் ஒருவர் முகம் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவரது அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை நடத்தியதில், மோட்டார் சைக்கிளில் சென்றபோது அந்த வழியாக வந்த வாகனம் மோதியதில் அவா் இறந்தது தெரியவந்தது. முகம் சிதைந்ததால் அவர் யார்? என்று தெரியாமல் இருந்தது. இதுகுறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், பழனிசெட்டிபட்டியை சோ்ந்த வெல்டிங் தொழிலாளி கார்த்திகேயன் (வயது 38) என்பது தெரியவந்தது.

மேலும் செய்திகள்