< Back
மாநில செய்திகள்
கீழடி அருங்காட்சியகத்திற்கு ஒரு நாள் சுற்றுலா
விருதுநகர்
மாநில செய்திகள்

கீழடி அருங்காட்சியகத்திற்கு ஒரு நாள் சுற்றுலா

தினத்தந்தி
|
26 March 2023 12:33 AM IST

கீழடி அருங்காட்சியகத்திற்கு ஒரு நாள் சுற்றுலாவிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.


விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலா துறையின் சார்பில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான ஒருநாள் கீழடி அருங்காட்சியக கல்வி சுற்றுலா மற்றும் பொதுமக்களுக்கான கீழடி அருங்காட்சியக ஒரு நாள் சுற்றுலா பயணத்தை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார். இந்த ஒரு நாள் சுற்றுலா பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கட்டணம் இல்லாமலும், பொதுமக்களுக்கு ரூ.300 கட்டணத்திலும் சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் பொதுமக்களுக்கான ஒரு நாள் சுற்றுலா ரூ. 300 கட்டணத்தில் காலையில் புறப்பட்டு கீழடி அருங்காட்சியகம் சென்று பார்வையிட்டு திருப்பி வர மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கீழடி அருங்காட்சியக சுற்றுலாவிற்கு செல்ல விரும்புவோர் முன்பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்தநிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, சுற்றுலா அலுவலர் அன்பழகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்