< Back
மாநில செய்திகள்
ஆதரவற்ற 100 குழந்தைகளுக்கு ஒரு நாள் சுற்றுலா
பெரம்பலூர்
மாநில செய்திகள்

ஆதரவற்ற 100 குழந்தைகளுக்கு ஒரு நாள் சுற்றுலா

தினத்தந்தி
|
11 Oct 2023 12:36 AM IST

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதரவற்ற 100 குழந்தைகளுக்கு ஒரு நாள் சுற்றுலா பயணத்தை கலெக்டர் வழியனுப்பி வைத்தார்.

பெரம்பலூர் மாவட்டம் செஞ்சேரி பகுதியில் உள்ள ஹர்ட் எனும் தன்னார்வ அமைப்பில் ஆதரவற்ற நிலையில் இருக்கும் 100 குழந்தைகள், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தஞ்சை அரண்மனை, பெருவுடையார் கோவில், சரஸ்வதி மஹால், சரபோஜி மன்னர் அருங்காட்சியகம் உள்பட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு ஒரு நாள் பயணமாக சுற்றுலா துறையின் சார்பில் நேற்று அழைத்து செல்லப்பட்டார்கள். 2 பஸ்களில் புறப்பட்ட இந்த குழந்தைகளை மாவட்ட கலெக்டர் கற்பகம் நேரில் சந்தித்து, அவர்களுடன் உரையாடி வழியனுப்பி வைத்தார்.

முன்னதாக, குழந்தைகளை அழைத்துச்செல்லும் பொறுப்பு ஆசிரியர்களிடமும், சுற்றுலாத்துறை அலுவலர்களிடமும், வாகன ஓட்டுனர்களிடமும் குழந்தைகளை கவனமாக கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும், வாகனங்களை பாதுகாப்பாக இயக்க வேண்டும் என்றும், சுற்றுலாத்தலங்களில் உள்ள வரலாற்று சிறப்புகளை குழந்தைகளுக்கு எடுத்துக்கூற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அப்போது பெரம்பலூர் மாவட்ட சுற்றுலா அலுவலர் (பொறுப்பு) ஜெகதீஸ்வரி, ஹார்ட் அமைப்பின் தலைவர் ராஜா வெங்கடேஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்